உதகையில் இருந்து கோவை வந்த அரசு பேருந்து மீது நிலச்சரிவு!
கோவை: நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் பர்லியார் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதில் மண் மற்றும் ராட்சத மரங்கள் சரிந்து விழுந்தன. மலைப்பாதையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பேருந்து சிக்கிக்கொண்டது. தகவலறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பேருந்தின் மீது விழுந்த மண் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பேருந்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலை குறித்த முழுமையான தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொடர் மழையால் மலைப்பாதைகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0