கோவையில் தெறிக்கவிட்ட ரேசிங்! 15 வயது வீரர்கள் அசத்தல்… ஆரிஸ் கிரியாகோவ் ஆதிக்கம்!

Sep 13, 2026 - 23:47
 0  9
கோவையில் தெறிக்கவிட்ட ரேசிங்! 15 வயது வீரர்கள் அசத்தல்… ஆரிஸ் கிரியாகோவ் ஆதிக்கம்!
கோவையில் தெறிக்கவிட்ட ரேசிங்! 15 வயது வீரர்கள் அசத்தல்… ஆரிஸ் கிரியாகோவ் ஆதிக்கம்!
கோவையில் தெறிக்கவிட்ட ரேசிங்! 15 வயது வீரர்கள் அசத்தல்… ஆரிஸ் கிரியாகோவ் ஆதிக்கம்!
கோவையில் தெறிக்கவிட்ட ரேசிங்! 15 வயது வீரர்கள் அசத்தல்… ஆரிஸ் கிரியாகோவ் ஆதிக்கம்!

ஜே.கே. டயர் வழங்கும் இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் 2026 போட்டிகள், கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் விறுவிறுப்பாக தொடங்கின. இதன் முக்கிய போட்டியான எப்4 இந்திய சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் 3 பந்தயங்கள் நடைபெற்றன.முதல் சுற்றின் மூன்று பந்தயங்களிலும் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. கிச்சா'ஸ் கிங்ஸ் பெங்களூரு அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஆரிஸ் கிரியாகோவ், இரண்டு பந்தயங்களில் 2-வது இடமும், 3-வது பந்தயத்தில் முதலிடமும் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் முதல் சுற்றின் மிகவும் மதிப்புமிக்க வீரராக அவர் உருவெடுத்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற முதல் பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜே.ஏ ரேசிங் அணிக்காக களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர் லுவிவே சம்புட்லா, 8-வது இடத்தில் இருந்து பந்தயத்தை தொடங்கி, முதல் 4 சுற்றுகளுக்குள்ளாகவே முன்னணி வீரர்களை முந்தி முதல் 3 இடங்களுக்குள் முன்னேறினார்.

பந்தயத்தின் இடையே பாதுகாப்புக்காக ‘சேப்டி கார்’ களமிறக்கப்பட்டதால் வீரர்களுக்கு இடையிலான நேர வித்தியாசம் குறைந்த போதிலும், சம்புட்லா தனது வேகத்தை தொடர்ந்து தக்க வைத்தார். 31 நிமிடங்கள் 05.808 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து முதலிடம் பிடித்தார். ஆரிஸ் கிரியாகோவ் 2.245 வினாடிகள் பின்தங்கி 2-வது இடமும், கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியின் 15 வயது சிங்கப்பூர் வீரர் ஆரோன் மேத்தா 3-வது இடமும் பிடித்தனர்.ஆரோன் மேத்தா ஒரு சுற்றை 1 நிமிடம் 05.652 வினாடிகளில் கடந்ததுடன், இந்த போட்டியின் வரலாற்றில் முதல் இடத்தில் இருந்து பந்தயத்தை தொடங்கிய இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். டயர்கள் தேய்ந்ததால் இறுதியில் வேகத்தை தக்க வைக்க முடியாமல் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

2-வது பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜே.ஏ ரேசிங் அணியின் 15 வயது வீரர் ஆர்யன் நரோலா வெற்றி பெற்றார். முதல் இடத்தில் இருந்து பந்தயத்தை தொடங்கிய அவர், 26 சுற்றுகளிலும் ஆரிஸ் கிரியாகோவ் கொடுத்த கடும் நெருக்கடியை சமாளித்து, வெறும் 0.624 வினாடிகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார். ஆரிஸ் கிரியாகோவ் 2-வது இடத்தையும், ஸ்வர்ணவ் தாஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.இந்த வெற்றியின் மூலம் எப்4 சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரண்டாவது மிக இளம் வயது வெற்றியாளர் என்ற சாதனையை ஆர்யன் நரோலா பெற்றார்.

3-வது பந்தயத்திலும் முதல் இடத்தில் இருந்து போட்டியை தொடங்கிய ஆரிஸ் கிரியாகோவ், இந்த முறை மஹ்லோரி மபுண்டாவிடம் இருந்து கடும் சவாலை எதிர்கொண்டார். பெரும்பாலான நேரம் நெருக்கமாக பின்தொடர்ந்த மபுண்டாவை சமாளித்து, கிரியாகோவ் முதலிடத்தை பிடித்தார். ஆரோன் மேத்தா 3-வது இடத்தையும், முதல் பந்தய வெற்றியாளரான லுவிவே சம்புட்லா 4-வது இடத்தையும் பிடித்தனர்.மூன்று பந்தயங்களில் 7 வெவ்வேறு வீரர்கள் முதல் 3 இடங்களை பிடித்தது, இந்த சீசனில் நிலவும் கடும் போட்டிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.மொத்தம் 6 சுற்றுகளைக் கொண்ட எப்4 இந்திய சாம்பியன்ஷிப்பின் 2-வது சுற்றும் கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயிலேயே நடைபெற உள்ளது. இதனால் வீரர்களுக்கு மீண்டும் அதிக புள்ளிகளை குவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0