விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளி! சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா..!

Sep 24, 2026 - 15:23
 0  227

கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் மேதகு மார் பால் ஆலப்பாட் அவர்களால் நிறுவப்பட்டு, கோவை பட்டணம் எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளி, தனது 10-ம் ஆண்டு பயணத்தை கொண்டாடி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, நடப்பு கல்வியாண்டில் விளையாட்டுத் துறையில் மண்டல, பிராந்திய மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஃபேபின் நீலங்காவில், உதவித் தாளாளர் அருட்தந்தை சச்சின் காலிங்கல் ஆகியோர் முன்னிலை வகித்து, சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.பள்ளி முதல்வர் திருமதி கேரென் அகஸ்டின் கூறியதாவது:

“எங்கள் பள்ளி ICSE போர்டு விதிமுறைகளை பின்பற்றி தரமான கல்வியை வழங்குவதுடன், விளையாட்டு மற்றும் கலைத் துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஸ்கேட்டிங், கராத்தே, ஆர்ச்சரி, கபடி, கூடைப்பந்து, நடனம், இசை, கலை மற்றும் கைவினை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் பயனாக, எங்கள் பள்ளி மாணவர்கள் மண்டல, பிராந்திய மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். வரும் காலங்களிலும் கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரு துறைகளிலும் மாணவர்கள் பன்முகத் திறனுடன் சாதிப்பார்கள்” என்றார்.சாதனை படைத்த மாணவர்கள் 4-ம் வகுப்பு மாணவர் ஃபெர்டினோ ஜோசப், 11 வயதுக்குட்பட்டோர் ஸ்கேட்டிங் பிரிவில் CISCE மண்டல அளவிலான போட்டியில் ரோடு ரேஸ் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், 500 மீட்டர் பிரிவில் 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கமும் வென்றார். இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடைபெற்ற CISCE தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

8-ம் வகுப்பு மாணவி அஞ்சனா, 14 வயதுக்குட்பட்டோர் வட்டு எறிதல் போட்டியில் CISCE மண்டல அளவில் 2-ம் இடம் பெற்று, ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும், குண்டு எறிதலில் 3-ம் இடமும், வட்டு எறிதலில் புதிய மண்டல சாதனையுடன் முதலிடமும் பெற்று சாதனை படைத்தார்.

8-ம் வகுப்பு மாணவர் செந்தூரன், 14 வயதுக்குட்பட்டோர் கபடி பிரிவில் CISCE மண்டல அளவில் 3-ம் இடம் பெற்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார்.

8-ம் வகுப்பு மாணவர் தருண் ஆதீஷ், 14 வயதுக்குட்பட்டோர் கபடி பிரிவில் CISCE மண்டல அளவில் 3-ம் இடம் பெற்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தனது விடாமுயற்சியையும் குழு உணர்வையும் வெளிப்படுத்தினார்.

9-ம் வகுப்பு மாணவர் பிரணேஷ், 17 வயதுக்குட்பட்டோர் கபடி பிரிவில் CISCE மண்டல அளவில் 4-ம் இடம் பெற்றார். மேலும், ஹைதராபாத்தில் உள்ள ஜான்சன் கிராமர் பள்ளியில் நடைபெற்ற CISCE தேசிய அளவிலான போட்டியில் அணியை வழிநடத்தி 3-ம் இடத்தை பெற்றுத் தந்தார்.

சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

What's Your Reaction?

Like Like 14
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 6