கோவையில் 65 வது மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி! மாணவ, மாணவியர்கள் உற்சாகம்!

Sep 7, 2026 - 14:46
 0  27

கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 65-வது கோயம்புத்தூர் மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி–2026, 10-வது வி.மைல்சாமி B.A., B.L. நினைவு ஜூனியர் டிராபி தடகளப் போட்டி–2026 மற்றும் 5-வது சி.சங்கரன் நினைவு சீனியர் டிராபி தடகளப் போட்டி–2026 ஆகியவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 ஒட்டுமொத்த அணிப பிரிவில் யூனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமி 277 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ட்ரையம்ப் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் 215 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும், அத்லெடிக் ஃபவுண்டேஷன் 205 புள்ளிகளுடன் மூன்றாம் இடமும் பெற்றன. யாக்கை ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் 199 புள்ளிகளுடன் நான்காம் இடமும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி 149 புள்ளிகளுடன் ஐந்தாம் இடமும் பிடித்தன.சிறுவர்கள் அணி ஒட்டுமொத்தப் பிரிவில் ட்ரையம்ப் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷனும், சிறுமிகள் அணி பிரிவில் யூனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் முதலிடம் பெற்றன. ஆண்கள் பிரிவில் யூனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமியும், பெண்கள் பிரிவில் அவினாசிலிங்கம் கிளப்பும் முதலிடம் பிடித்தன. ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்த பிரிவில் அத்லெடிக் ஃபவுண்டேஷன் முதலிடம் பெற்றது.இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகள் திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும்‌ கோவை பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழ்நாடு தடகள சங்க திட்டமிடுதல் மற்றும் செயலாக்க துறை தலைவர் லதா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டீன் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

விழாவில் ரோட்டரி கிளப் லோகநாதன், கோகுல் கிருஷ்ணன், கோவை மாவட்ட தடகள சங்க செயலாளர் சம்சுதீன், பொருளாளர் டாக்டர் ஜான் சிங்கராயர், தொழில்நுட்ப செயலாளர் சீனிவாசன், நிஜாமுதீன், நந்தகுமார், துணைத் தலைவர் சரவணகாந்தி, மெடிக்கல் கமிட்டி தலைவர் டாக்டர் சுமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பயிற்சியாளர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0