துபாயில் கராத்தே போட்டி: கோவை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை!

Oct 31, 2026 - 15:25
 0  10

துபாயில் நடந்த இந்தோ – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில், கோவை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த அக். 25ல் துபாயில் நடைபெற்ற இப்போட்டியில், கார்மல் கார்டன் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவர் ராம் ஈஸ்வர், கட்டா பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், சண்டைப் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும் வென்றார். ஏழாம் வகுப்பு மாணவி ஜெஸ்லி, கட்டா பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேசப் போட்டியில் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளியின் தாளாளரும் முதல்வருமான அருட்தந்தை ஆரோக்கிய ததேயூஸ் பாராட்டி வாழ்த்தினார்.மேலும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கராத்தே பயிற்சியாளர்கள் சிரில்வினோத், கோகுலகிருஷ்ணன், ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வெற்றியாளர்களைப் பாராட்டினர்.சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற மாணவர்களின் சாதனைக்கு பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டு தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0