வீ தி லீடர்ஸ் சார்பில் பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றத்திற்காக 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சிலம்பம் பயிற்சி..!

Nov 2, 2026 - 09:06
 0  48
வீ தி லீடர்ஸ் சார்பில் பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றத்திற்காக 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சிலம்பம் பயிற்சி..!

கோவை துடியலூர் அருகே கணுவாய் பகுதியில் வீ தி லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 2 மாத இலவச தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் சிலம்பம், வேல் கம்பு, வாள், சுருள் வாள் உள்ளிட்ட தற்காப்பு கலையில் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தங்களது திறமையினை வெளிப்படுத்தி அசத்தினர். குறிப்பாக வாயில் மண்ணெணை ஊற்றி தீ பந்தம் வைத்து மூலம் ஊதி நெருப்பு வரவைத்தது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்ற அனைவருக்கும் மெடல் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றம், பெரியநாயக்கன்பாளையம் மெற்கு ஒன்றியம் வீ தி லீடர்ஸ் சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 2 மாத இலவச தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் பயிற்சி வழங்கப்பட்டது. சிலம்பம் பயிற்சிகளை சுவடு சிலம்பம் பயிற்சி அகாடமியின் நிறுவனர் வெண்மதி குழுவினர் வழங்கினர்.துடியலூர் அருகே கணுவாய் தடாகம் சாலை, குன்று பெருமாள் கோவில் பகுதியில் உள்ள எஸ் ஆர் டி டர்ப் வளாகத்தில் நடந்து வந்த இலவச சிலம்ப பயிற்சி முகாமின் நிறைவு விழா விமர்சையாக நடைபெற்றது. 

தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் வீ தி லீடர்ஸ் தன்னார்வலர் தடாகம் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். தன்னார்வலர் டாக்டர் சசி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக வீ தி லீடர்ஸ் மாநிலப் பொருளாளர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டார்.தொடர்ந்து முகாமில் பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் சிலம்பம், வேல் கம்பு, வாள், சுருள் வாள் உள்ளிட்ட தற்காப்பு கலையில் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தங்களது திறமையினை வெளிப்படுத்தி அசத்தினர். குறிப்பாக வாயில் மண்ணெணை ஊற்றி தீ பந்தம் வைத்து மூலம் ஊதி நெருப்பு வரவைத்தது அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையடுத்து பயிற்சி பெற்ற அனைவருக்கும் மெடல் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். மேலும் பயிற்சிகள் வழங்கிய சுவடு சிலம்பம் பயிற்சி அகாடமியின் பயிற்சியாளர்களுக்கும் விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வீ தி லீடர்ஸ் தன்னார்வலர்கள் செந்தில், ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷ், பன்னீர்மடை பரணி, செந்தில்குமார், பாலகுமார், தடாகம் கார்த்திக், தாளியூர் ஆனந்த், டாக்டர் சசி, பரணி சவுண்ட் சர்வீஸ் சுப்பிரமணி, வரப்பாளையம் ஜெயக்குமார், புவனேஸ்வரன், மகேந்திரன், மகேஷ், அரவிந்த், கமல்நாத், டி எஸ் ஏ மோகன், தராசு முருகன், திருப்பூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.சிலம்பம் பயிற்சி முகாமை வீ தி லீடர்ஸ் தன்னார்வலரும் எஸ் ஆர் டி டர்ப் ஹேமந்த் ஒருங்கிணைத்திருந்தார். இறுதியில் வீ தி லீடர்ஸ் தன்னார்வலர் ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷ் நன்றியுரை கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0