தூய்மைப் பணியாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல... தூய்மைத் தேவதைகள்! – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., புகழாரம்!

Nov 2, 2026 - 15:44
 0  3
தூய்மைப் பணியாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல... தூய்மைத் தேவதைகள்! – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., புகழாரம்!
தூய்மைப் பணியாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல... தூய்மைத் தேவதைகள்! – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., புகழாரம்!
தூய்மைப் பணியாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல... தூய்மைத் தேவதைகள்! – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., புகழாரம்!

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்கு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்.எஸ். குளம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி, கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் கீரணத்தம் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்கு, கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. கனிமொழி சந்தோஷ் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ், தீபாவளி போன்ற பண்டிகைகளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்போது, மக்களின் நலனுக்காக அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களையும் நினைவுகூர்ந்து அவர்களது மகிழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றார்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் சாதாரணப் பணியாளர்கள் அல்ல; சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், மக்களின் வாழ்க்கையைச் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் தூய்மைத் தேவதைகள் என்று புகழாரம் சூட்டினார். அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், விரைவில் அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் உயர்ந்தது. அவர்கள் மேற்கொள்ளும் பணியை எளிதில் யாராலும் செய்துவிட முடியாது. அவர்களது சேவைக்கு தலைவணங்கி சல்யூட் செய்வதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுடன் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0