“நல்லதோர் வீணை செய்வோம்!” – போதைக்கு எதிராக கோவை மாணவர்கள் உறுதிமொழி!
கோவையில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ரோட்டரி கிளப் ஆஃப் கோவை மற்றும் ஆர்.வி.எஸ். குழும நிறுவனங்கள் சார்பில், “போதை இல்லா தமிழகம் – ஆரோக்கியமான இளைஞர்கள், வளமான தமிழகம்” என்ற நோக்கத்தில் சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
கோவை ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் கே.வி. குப்புசாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக ஆர்.வி.எஸ். குழும நிறுவனங்களின் அறங்காவலர் பாலசந்தர் பங்கேற்றார்.
மேலும், ஆர்.வி.எஸ். பல் மருத்துவக் கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் பேராசிரியர் டாக்டர் விஜய் வி.கே., ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஜி. மோகன்குமார், ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் எம். நடராஜன், ஆர்.வி.எஸ். இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் பேராசிரியர் டாக்டர் எஸ். விஜயன், ஆர்.வி.எஸ். பத்மாவதி பார்மசி கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். சுந்தரகணபதி, ஆர்.வி.எஸ். மருந்தியல் அறிவியல் கல்லூரி, சூலூர் முதல்வர் முனைவர் பேராசிரியர் டாக்டர் நீலாவேணி தங்கவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ரோட்டரி நிர்வாகிகள் சார்பில், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206-ன் மாவட்டச் செயலாளர் ரோட்டேரியன் சி.டி. தியாகராஜன், டிடி ரோட்டேரியன் கே.சி. நாகராஜ், அசிஸ்டென்ட் கவர்னர் ரோட்டேரியன் எம்.பி.எச்.எஃப். ஜான் சிங்கராயர், ஜிஜிஆர் ரோட்டேரியன் பி.எச்.எஃப். கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை மைத்ரியின் தலைவர் ரோட்டேரியன் டாக்டர் வித்யா ஹரி ஐயர், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சாரலின் தலைவர் ரோட்டேரியன் பொறியாளர் வினோத் குமார் ஆகியோரும் சிறப்பு பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ஹியூமெட் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ரோட்டேரியன் பி.எச்.எஃப். லோகநாதன் டி., ரோட்டரி கிளப் ஆஃப் கோவையின் தலைவராகவும் நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.ரோட்டரி கிளப் ஆஃப் கோவை செயலாளர் ரோட்டேரியன் எஸ். கோகுலகண்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பிரச்சாரம் அமைந்தது.
“நல்லதோர் வீணை செய்வோம்” என்ற கருத்தை முன்னிறுத்தி, ஆரோக்கியமான இளைஞர்களின் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, “போதையில்லா கோவை, போதையில்லா தமிழகம்” உருவாக வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0