2 டன் மலர்களால் ஜொலித்த புலியகுளம் விநாயகர்! அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!
கோவை புலியகுளம் அருள்மிகு முந்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி, அதிகாலை 2 .மணிக்கு யாகம் நடத்தப்பட்டு, 3 மணிக்கு முந்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பு ராஜா அலங்காரத்தில் அருள்பாலித்த முந்தி விநாயகருக்கு சுமார் 2 டன் மலர்கள், 50 கிலோ சந்தனம் மற்றும் 16 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. ராஜலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை தரிசிக்க அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.விழாவில், கோவில் செயல் அலுவலர் செ. கனகராஜ், தக்கர் கே. பவாணி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும், ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0