வடவள்ளி தாம்ப்ராஸ் கிளை ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆயிரம் உறுப்பினர்களுடன் தொடர்ந்து செயல்படும் கிளை!
தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) வடவள்ளி கிளையின் 2025–2026-ம் ஆண்டுக்கான ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப். 6-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில், கிளைப் பொதுச் செயலாளர் ஸ்ரீ வி.பாண்டுரங்கன் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில், 1985-ம் ஆண்டு 129 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட வடவள்ளி கிளை, தற்போது சுமார் 1,000 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு கட்டப்பட்டு, 2024-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட தாம்ப்ராஸ் கட்டிடத்தில் தினசரி மாலை ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ஏகாதசி தினங்களில் ஸ்ரீமன் நாராயணீயம் பாராயணம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
2025–2026-ம் ஆண்டில் ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ சங்கர ஜெயந்தி, நாம சங்கீர்த்தனம், திருப்புகழ் இசை நிகழ்ச்சி, வேத உபாகர்மாக்கள், ஸ்ரீ பகவத் சேவை, நவராத்திரி சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜை, ஸ்ரீ ம்ருத்ஞ்ஜய ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஸ்ரீ கே.என்.பரசுராமன் மாநில செயலாளராகவும், ஸ்ரீ வி.பாண்டுரங்கன் மாநில இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றதற்கும், பிராமண சேவாரத்னா ஸ்ரீ என்.நாராயணன் மீண்டும் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கும் கிளை சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
வடவள்ளி கிளை இளைஞரணி செயலாளர் ஸ்ரீ என்.கண்ணன் மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில், வடவள்ளி கிளை அமைப்புச் செயலாளர் ஸ்ரீ கே.என்.பரசுராமனுக்கு ‘பிராமண சேவா பூஷன்’ விருது வழங்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ எஸ்.எஸ்.ராமன், ஸ்ரீ கே.லக்ஷ்மி நாராயணன், ஸ்ரீ டி.சங்கரன் ஆகியோருக்கும் தனிநபர் விருதுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் வடவள்ளி கிளை நிர்வாகிகள் பங்கேற்றதுடன், 6 மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.50 ஆயிரம் சந்தாத் தொகை இரண்டு தவணைகளில் முழுமையாக செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
நவராத்திரி கொலு அமைத்த உறுப்பினர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கிய நிகழ்வுக்கும் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், வடவள்ளி கிளையைச் சேர்ந்த ஸ்ரீ வி.பாண்டுரங்கன், ஸ்ரீ ஆர்.விஜய் பாரத் ஆகியோர் மாநில போஷகர்களாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சமூக, ஆன்மிக மற்றும் கல்விப் பணிகளில் வடவள்ளி தாம்ப்ராஸ் கிளை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
5
Dislike
1
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0