பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 12 ஆம் ஆண்டு விளையாட்டு விழா..!

Sep 26, 2026 - 22:37
 0  4
பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 12 ஆம் ஆண்டு விளையாட்டு விழா..!

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பிருந்தாவன் பள்ளியின் 12-ம் ஆண்டு விழா  தாளாளர் வசந்தராஜன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். 

இவ்விழாவில் விளையாட்டு நிகழ்ச்சிகளை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு  ஓட்டப் பந்தயம்,குண்டு எறிதல்,ஈட்டி எறிதல்,தடைகளை தாண்டிய ஓட்டப் பந்தய போட்டி,நீளம் தாண்டுதல்,உயரம்தாண்டுதல் போன்ற போட்டிகள் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் மூலம்  4 நாட்களுக்கு முன்பே நடைபெற்றது.மாணவ மாணவியர் விருப்பப்பட்ட விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில்  பள்ளி முதல்வரான திருமதி.வனிதா திருமூர்த்தி  தலைமையில்,1500 பார்வையாளர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் தேசிய கொடியையும்,தாளாளர் வசந்த ராஜன், திருமூர்த்தி பள்ளி கொடியையும்,முதல்வர் திருமதி.வனிதா விளையாட்டு கொடியையும் ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து தீரன் சின்னமலை பெயரில் நீல நிற அணிவகுப்பும்,வேலு நாச்சியார் பெயரில் பச்சை நிற அணிவகுப்பும்,வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் சிவப்பு நிற அணிவகுப்பும்,வாஞ்சிநாதன் பெயரில் மஞ்சள் நிற அணிவகுப்பும் நடத்தப்பட்டது .

பிறகு விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து நிகழ்ச்சி இனிதே துவங்கியது.தொடர் ஓட்டப் போட்டி நிகழ்த்தப்பட்டது இப்போட்டியின் முடிவில் வாஞ்சிநாதன் பெயரில் மஞ்சள் நிறஅணி முதலிடத்தையும்,வேலு நாச்சியார் பெயரை கொண்ட நீல நிறஅணி இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றது.

நான்கு வகை அணி வகுப்புகளில் தீரன் சின்னமலை பெயரில் அமைந்த நீல நிற அணி முதல் இடத்தையும்,வாஞ்சிநாதன் பெயரில் அமைந்த மஞ்சள் நிற அணி இரண்டாவது இடத்தையும் பெற்றது.

அனைத்து விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.

மாணவ மாணவியருக்கு விளையாட்டு நன்மைகளையும்,அதிக மாணவர்கள் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஊக்கமான அறிவுரைகளை வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0