நவீன தொழில்நுட்பங்களின் சங்கமம்! ஜெர்மனியில் ‘தி பிரைட் வேர்ல்டு ஆஃப் மெட்டல்ஸ் 2027’!
ஜெர்மனியின் டுசல்டார்ஃப் நகரில், வரும் 2027ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ‘தி பிரைட் வேர்ல்டு ஆஃப் மெட்டல்ஸ் 2027’ என்ற சர்வதேச உலோகத்துறை கண்காட்சி நடைபெற உள்ளது.கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கண்காட்சி, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெறுகிறது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை கொடிசியாவில் நடைபெற்றது. இதில் நிகழ்வின் நிர்வாகிகள் ஆண்ட்ரே கிளிம், மால்டே சீலெர்ட், டில் ஷ்ரைட்டர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த சர்வதேச கண்காட்சியில் பங்கேற்று, உலோகத்துறை சார்ந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளனர்.இதன் மூலம் உலோகத்துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும், உலோகத்துறை சார்ந்த பல்வேறு கருத்தரங்குகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இத்துறையின் தற்போதைய நிலை, துறை எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.அதுமட்டுமின்றி, உலோகத்துறையில் அறிமுகமாகி வரும் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், எதிர்கால வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் கருத்தரங்குகளில் விவாதிக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், உலோகத்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், தொழில் வாய்ப்புகள் மற்றும் சர்வதேச பொருளாதார நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள இந்தக் கண்காட்சி முக்கிய வாய்ப்பாக அமையும்.பொதுமக்களும் கண்காட்சிக்கு வருகை புரிந்து, உலோகத்துறை சார்ந்த பல்வேறு புதிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும், கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு வந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0