207 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு! உத்தரமேரூர் லோக் அதாலத்தில் ரூ.14.38 லட்சம் இழப்பீடு!

Sep 12, 2026 - 18:13
 0  2
207 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு! உத்தரமேரூர் லோக் அதாலத்தில் ரூ.14.38 லட்சம் இழப்பீடு!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

உத்தரமேரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கிருத்திகா தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில், வாகன விபத்து வழக்குகள், குற்ற வழக்குகள், காசோலை மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.இதில், மொத்தம் 207 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 14 லட்சத்து 38 ஆயிரத்து 800 ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்க நீதிபதி கிருத்திகா உத்தரவிட்டார்.

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பொதுமக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும் வகையில் லோக் அதாலத் நடத்தப்படுகிறது.மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு செலவு இல்லாமல் விரைவாக தீர்வு கிடைப்பதுடன், தீர்வு ஏற்பட்டவுடன் உத்தரவு நகலும் உடனடியாக வழங்கப்படுகிறது.

மேலும், ஏற்கெனவே செலுத்திய நீதிமன்றக் கட்டணமும் திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது.இருதரப்பினரின் சம்மதத்துடன் தீர்வு காணப்படுவதால், வெற்றி–தோல்வி என்ற நிலை இல்லாமல் வழக்குகள் சுமூகமாக முடிவுக்கு வருகின்றன.

மேலும், லோக் அதாலத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்பதால், நீண்டகால வழக்குகளுக்கும் விரைவான முடிவு கிடைக்கிறது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0