அதிமுகவை போட்டியாக பார்க்கவில்லை.. இனி எல்லாம் விசில்தான்.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் அதிரடி..!

Oct 9, 2026 - 16:39
 0  3

தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தலைமையில், கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கூறியதாவது:தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றி நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். எங்கள் தளபதி கால் வைத்த இடத்தில் வெற்றி கிடைக்காமல் இருக்குமா? இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. சட்டமன்றத் தேர்தல் வெற்றியைவிட, தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி தவெகவை அசைக்கவே முடியாது; இனி எல்லாம் விசில்தான்.

இரு தொகுதிகளிலும் எனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம். அதிமுகவை நாங்கள் போட்டியாகப் பார்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். அங்கு இருந்த எம்.எல்.ஏ.க்கள் இங்கு வந்தது நியாயத்தின் பக்கம் நிற்பதற்காகத்தான். எங்கள் தளபதியின் முகத்திற்காகவே வெற்றி கிடைக்கும். இனிவரும் காலங்களிலும் இதுவே தொடரும்.

திமுக இரண்டாவது இடத்தைப் பெற்றிருப்பது அதன் வளர்ச்சியைக் காட்டாது. தவெக மற்றும் திமுக இடையேதான் போட்டி நிலவுகிறது என்பதை இந்தத் தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது.இவ்வாறு கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0