ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்...!

Aug 24, 2026 - 13:59
Aug 24, 2026 - 14:01
 0  22
ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்...!
ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்...!
ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்...!
ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்...!

கோவை சூலுாரில் உள்ள ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

ஆர்.வி.எஸ்., நிர்வாகத்தின் சார்பில் நடந்த விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஓணம் பண்டிகையின் பாரம்பரியம் மற்றும் கலாசார சிறப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் இணைந்து வண்ணமயமான மலர்களால் அத்தப்பூ கோலம் அமைத்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மெகா செண்டமேளம் மற்றும் காவடியாட்டம் நடைபெற்றது. செண்டமேளத்தின் இசை மற்றும் காவடியாட்டம் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, ஓணம் பண்டிகையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் 25 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழை இலையில் பரிமாறப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து ருசித்து மகிழ்ந்தனர்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடியது விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது.

செய்தியாளர் சந்திப்பு

ஓணம் கொண்டாட்டத்தை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

இதில், ஆர்.வி.எஸ். குழும நிறுவனங்களின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் சமன்யூ சதீஷ், ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஓணம் கொண்டாட்டத்தின் நோக்கம் மற்றும் சிறப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர்கள், மாணவர்களின் கல்வியுடன் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

அத்தப்பூ கோலம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மெகா செண்டமேளம், காவடியாட்டம் மற்றும் 25 வகையான உணவு விருந்து என, ஓணம் கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் விழாக்கோலத்தை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0