பொதுமக்கள் மனுக்கள் அலைக்கழிக்கப்படுகிறதா பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்...!
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அதிக இடங்களில் சாலை ஆகிர அமைப்பு குளம் ஏரி ஆறு குட்டை போன்றவைகள் ஆகிரமைப்பு செய்து நில விற்பனையாளர்கள் பூந்தமல்லி ஒன்றிய அதிகாரியுடன் இணைந்து அனுமதி பெற்று விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு இதைப்பற்றி புகார் அளித்தால் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர் பணம் பத்தும் செய்யும் என்பது போல் இந்த பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் அதிகமாக லஞ்ச லாவண்யம் நடைபெற்று வருகிறது கடந்த ஐந்தாண்டு கோப்புகளை ஆய்வு செய்தால் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவரும் என்று சமூக ஆர்வலரும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றன பஞ்சாயத்து தலைவர்கள் இல்லாததால் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் காட்டில் மழை பொழிந்து வருகிறது இதனால் வரை கொசு மருந்து அளிக்கப்படவில்லை பேச்சின் பவுடர் போடப்படவில்லை தூர்வாராத குளத்துக்கு தூர் வாரியதாக போலியான பில்களை போட்டு கொள்ளையோ கொள்ளை அடிக்கின்றனர் அது மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் ஒரு ஆண்டு காலமாக நடவடிக்கை எடுக்காத ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல் எந்த ஆட்சி வந்தாலும் நாங்கள் தான் அதிகாரிகள் நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆணவத்துடன் இருக்கும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய் சாட்டையை சுழற்றுவாரா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடுவாரா மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பொதுமக்கள் கேள்வி பஞ்சாயத்து கிணற்றை வேற காணவில்லை கண்டுபிடித்து தருவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்..?
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0