மேட்டுப்பாளையத்தில் புதிய EV ஆலை! நவ்ரங் நிறுவனத்தின் அதிரடி தொடக்கம்!
கோவை மேட்டுப்பாளையத்தில் நவ்ரங் நிறுவனத்தின் புதிய மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறக்கப்பட்டுள்ளது.மின்சார வாகன விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில், ஜனாஷா குழுமத்தின் நவ்ரங் நிறுவனம் சார்பில், மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் சாலையில் இந்தப் புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில், ஜனாஷா குழும நிறுவனங்களின் தலைவர் அபிஷேக் பாண்டே மற்றும் குழும இயக்குநர் டாக்டர் பி. நந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, புதிய விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில், ஜனாஷா குழும நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி என். கண்ண பிரான் மற்றும் நவ்ரங் மின்சார வாகன நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் வி. ரித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலும், குறைந்த செலவில் நம்பகமான போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கிலும் நவ்ரங் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படுவதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.நவீன மின்கலத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் இந்த வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து, சரக்குக் கொண்டு செல்லுதல் மற்றும் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு வணிகப் பயன்பாடுகளுக்கு ஏற்றவையாக உள்ளன.
மேலும், வாடிக்கையாளர்களின் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக வடிவமைப்பிலும் வாகனங்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன.இந்தப் புதிய விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை மூலம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார வாகன விற்பனை, சேவை மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சிக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0