மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி அல்ல… மாற்றத்திற்கான போட்டி! கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.
கோவை சரவணம்பட்டியில், ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் கேலக்ஸி மற்றும் யாழ் ஹோம்ஸ் சார்பில் நடத்தப்படும் இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் போட்டியில், இந்தியாவின் 15 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி சந்தோஷ், சட்டமன்ற உறுப்பினர், பேசுகையில், இது மாற்றுத்திறனாளி களுக்கான நிகழ்ச்சி என்று மட்டும் பார்க்க முடியாது. அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, உரிய வாய்ப்புகளை உருவாக்கும் சிறப்பான நிகழ்ச்சியாகும். 15 மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.
கடவுளின் குழந்தைகள் என்று அழைப்பது மட்டும் போதாது. அவர்களின் திறமைகளை அங்கீகரித்து, சமமான வாய்ப்புகளையும் உரிய தளத்தையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில், இந்த கிரிக்கெட் போட்டி பாராட்டுக்குரியது.
தவெக அரசு விளையாட்டுத் துறையை மேம்படுத்த முன்னுரிமை அளித்து வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் விளையாட்டில் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, அவர்கள் உயரங்களை அடைய தேவையான ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.
மேலும், போட்டியை ஏற்பாடு செய்த ரோட்டரி கேலக்ஸி அமைப்பினருக்கும், பங்கேற்ற 15 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0