கோவையில் தடகளத் திருவிழா! மாநிலப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு!

Sep 6, 2026 - 00:45
 0  5
கோவையில் தடகளத் திருவிழா! மாநிலப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு!
கோவையில் தடகளத் திருவிழா! மாநிலப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு!
கோவையில் தடகளத் திருவிழா! மாநிலப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு!
கோவையில் தடகளத் திருவிழா! மாநிலப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு!
கோவையில் தடகளத் திருவிழா! மாநிலப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு!

கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 65-வது கோயம்புத்தூர் மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி – 2026, 10-வது வி. மைல்சாமி பி.ஏ., பி.எல்., நினைவு ஜூனியர் டிராபி தடகளப் போட்டி – 2026 மற்றும் 5-வது சி. சங்கரன் நினைவு சீனியர் டிராபி தடகளப் போட்டி – 2026 ஆகிய போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகளின் தொடக்க விழா, நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறும் இப்போட்டிகளில், மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது தடகளத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், இப்போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகள், திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தடகள வீரர், வீராங்கனைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், எதிர்காலத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அவர்களை ஊக்கப்படுத்தும் வாய்ப்பாகவும் இப்போட்டிகள் அமைகின்றன.தொடக்க விழாவில் ரோட்டரி கிளப் லோகநாதன், கோகுல் கிருஷ்ணன், கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்க செயலர் சம்சுதீன், பொருளாளர் டாக்டர் ஜான்சிங்கராயர், தொழில்நுட்ப செயலர் சீனிவாசன், நிஜாமுதீன், நந்தகுமார் மற்றும் துணைத் தலைவர் சரவணகாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு தடகள சங்க திட்டமிடுதல் மற்றும் செயலாக்கத் துறை தலைவர் லதா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0