கோவையில் 300-க்கும் மேற்பட்ட யூஸ்டு கார்கள்... 11-வது மெகா கார் விற்பனை மேளா!

Sep 13, 2026 - 11:40
Sep 13, 2026 - 11:43
 0  1
கோவையில் 300-க்கும் மேற்பட்ட யூஸ்டு கார்கள்... 11-வது மெகா கார் விற்பனை மேளா!
கோவையில் 300-க்கும் மேற்பட்ட யூஸ்டு கார்கள்... 11-வது மெகா கார் விற்பனை மேளா!

கோயமுத்தூர் மாவட்ட கார் டிரேடர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில், 11-வது எடிஷன் மெகா யூஸ்டு கார் விற்பனை மேளா, கோவையில் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை, ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்ட கண்காட்சி, கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கார் விற்பனையாளர்களின் 300-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

சிறிய ரக கார்கள் முதல் உயர்தர கார்கள் வரை பல்வேறு மாடல்கள் இடம்பெறுவதுடன், 50 ஆயிரம் ரூபாய் முதல் பயன்படுத்தப்பட்ட கார்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பழைய காரை மாற்றிக் கொள்ளும் வசதி, பார்க் அண்ட் செல் வசதி, வங்கி கடன் மற்றும் ஆவணப் பணிகளுக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் இலவசமாக உரிமையாளர் பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் வாங்க அல்லது பழைய காரை விற்பனை செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 7092920021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0