கோவையில் அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சம் கல்வி உபகரணங்கள்!
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Rtn. AKRFC டாக்டர் லீமா ரோஸ் மார்டின், MLA, இயக்குநர் – மார்ட்டின் குழுமம் மற்றும் நிர்வாக அறங்காவலர் – மார்ட்டின் அறக்கட்டளை, இந்த கல்வி உபகரணங்களை பள்ளிக்கு வழங்கினார்.
இதில் 100 மேசைகள், 100 பெஞ்சுகள், 20 ஆசிரியர் மேசைகள், 20 ஆசிரியர் நாற்காலிகள் மற்றும் 20 இரும்பு அலமாரிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்றது.
நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியை G. விக்னேஸ்வரி, மார்ட்டின் குழும CSR மேலாளர் A. ஜான்பால் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆலமின் தலைவர் Rtn. ரகுநாதன் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கு வசதியான மற்றும் சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0