ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது மிஷினில் 6000 ரூபாய் இருந்த பணத்தை 100க்கு போன் செய்து தகவல் சொல்லிய பேராசிரியை...!
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பி அன் டி காலனியைச் சேர்ந்தவர் வி.சுதா. இவர் கோவை பீளமேடு கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ப்ரொபஷராக பணியாற்றி வருகிறார். இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மில் இன்று மதியம் பணம் எடுக்க செல்லும் போது மெஷினில் 6000 ரூபாய் வெளியே வந்து நின்றுள்ளது
இதையடுத்து அந்த பணத்தை எடுத்து அருகில் உள்ள செப்பல் கடையில் கொடுத்துவிட்டு, 100க்கு போன் செய்து தகவல் சொல்லி உள்ளார். சம்பவ இடம் சென்ற பெரியநாயக்கன்பாளையம் தலைமை காவலர் உமா சங்கர் அந்த பணத்தை கடைக்காரரிடம் இருந்து பெற்றுக் கொண்டு நரசிம்மநாயக்கன் பாளையம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேனேஜரிடம் ஒப்படைத்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0