சிடிஆர்-ஜேகே டயர் தேசிய கார் பந்தயம் 2026: விறுவிறுப்பான முதல் சுற்று நிறைவு..!

Oct 26, 2026 - 10:55
 0  3
சிடிஆர்-ஜேகே டயர் தேசிய கார் பந்தயம் 2026:  விறுவிறுப்பான முதல் சுற்று நிறைவு..!
சிடிஆர்-ஜேகே டயர் தேசிய கார் பந்தயம் 2026:  விறுவிறுப்பான முதல் சுற்று நிறைவு..!
சிடிஆர்-ஜேகே டயர் தேசிய கார் பந்தயம் 2026:  விறுவிறுப்பான முதல் சுற்று நிறைவு..!
சிடிஆர்-ஜேகே டயர் தேசிய கார் பந்தயம் 2026:  விறுவிறுப்பான முதல் சுற்று நிறைவு..!
சிடிஆர்-ஜேகே டயர் தேசிய கார் பந்தயம் 2026:  விறுவிறுப்பான முதல் சுற்று நிறைவு..!

சிடிஆர்-ஜேகே டயர் தேசிய கார் பந்தயம் 2026: விறுவிறுப்பான முதல் சுற்று நிறைவுஎல்.ஜி.பி பார்முலா 4: முதல் பந்தயத்தில் மெக்கோ ரேசிங் அணியின் துருவ் கோஸ்வாமி முதலிடம் பிடித்தார்.

காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நேற்று நடைபெற்ற சிடிஆர்-ஜேகே டயர் எப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்று முடிவடைந்தது. 2வது நாளில் மொத்தம் 8 பந்தயங்கள் நடந்தன. கடைசி திருப்பத்தில் கார்கள் மோதியது, வெறும் 0.004 விநாடி வித்தியாசத்தில் வெற்றி, மற்றும் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட பந்தயம் என இந்த நாள் மிகவும் பரபரப்பாக முடிந்தது.எல்.ஜி.பி பார்முலா 4: முதல் பந்தயத்தில் மெக்கோ ரேசிங் அணியின் துருவ் கோஸ்வாமி மிகச் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்தார். மெஹுல் அகர்வால் மற்றும் ஆர்யா சிங் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். பலத்த மழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக இரண்டாவது பந்தயம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் பாலபிரசாத் முதலிடமும், அகர்வால் இரண்டாமிடமும், ராகுல் ரங்கசாமி மூன்றாமிடமும் பிடித்தனர்.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை: ப்ரோ பிரிவில் பெங்களூரைச் சேர்ந்த அனிஷ் ஷெட்டி அபாரமாக செயல்பட்டு முதலிடம் பிடித்தார். நவநீத் குமார் இரண்டாவது இடத்தையும், செந்தில் குமார் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். அமெச்சூர் பிரிவில் வதோதராவின் கபீர் சாஹோச் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பதிவு செய்து அசத்தினார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஹரிஷ் யோதின் இரண்டாமிடமும், சௌரவ் சஞ்சய் தே மூன்றாமிடமும் பிடித்தனர்.

ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை: ஜென்டில்மேன் பிரிவில் மும்பையின் பிரதீக் சோனாவனே எளிதாக முதலிடம் பிடித்தார். சித்தார்த் பாலசுந்தரம் மற்றும் வினித் குமார் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். ரூக்கி பிரிவில் இலங்கையின் ஆதம் ஜுனைத் வெற்றி பெற்றார்.

 சூப்பர் சலூன் பிரிவுகள்: கடைசி நேரத்தில் நடந்த பெரும் மோதலுக்குப் பிறகு, இந்திய சூப்பர் டூரிங் கார்ஸ் பந்தயத்தில் பீரன் பிதாவல்லா முதலிடம் பிடித்தார். இந்திய டூரிங் கார்ஸ் பிரிவில் அமன் நாக்தேவ் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றார். ஜூனியர் டூரிங் கார்ஸ் பிரிவில் தீபக் ரவிக்குமார் மற்றும் சூப்பர் ஸ்டாக் பிரிவில் தில்ஜித் டி.எஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.எப்1300 நோவிஸ் கோப்பை: மெக்கோ ரேசிங் அணியின் ஷத்வீர் ஷெட்டி இந்த வார இறுதியில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து முதலிடம் பிடித்தார்.அகஸ்டின் பாபி இரண்டாவது இடமும், ஆதம் ஜுனைத் மூன்றாவது இடமும் பிடித்தனர். நான்காவது இடத்துக்கான போட்டியில் ருத்விக் ரெட்டி வெறும் 0.004 விநாடி வித்தியாசத்தில் யாஷ் விக்ரம் சிங்கை வீழ்த்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0