ஈரோட்டில் மனைவி நல வேட்பு விழா!
வேதாத்திரி மகரிஷியால் தோற்றுவிக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின் சார்பில், பெண்களின் பெருமையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் மனைவி நல வேட்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மனவளக் கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா, ஈரோடு சம்பத் நகர் சாலையில் உள்ள கொங்கு கலை அரங்கத்தில் நடைபெற்றது.விழாவிற்கு அறக்கட்டளை அறங்காவலர் பிரேமாவதி வரவேற்புரை வழங்கினார். அறங்காவலர் சி. சரஸ்வதி தியானத்தைத் தொடங்கி வைத்தார்.
மனைவி நல வேட்பின் முக்கியத்துவம் குறித்து முதுநிலை பேராசிரியர் கே. பெருமாள் சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து, மனைவியை கௌரவிக்கும் விதமாக கணவர்கள் தங்களது மனைவிகளுக்கு மலர் வழங்கியும், மனைவிகள் தங்களது கணவர்களுக்கு ஆப்பிள் பழம் வழங்கியும் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர், ராஜபாளையம் உமாசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ‘இல்லாள் எனும் நல்லாள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.விழாவில் 300-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.முடிவில், ஆழியார் அறிவுத்திருக்கோவில் அறங்காவலர் வி. ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
கணவன்–மனைவி இடையே அன்பையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் விழா நடைபெற்றது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0