ஆயிரம் மாணவர்கள்… ஒரே இலக்கு! துளிர் வினாடி வினாவில் அசத்திய 18 பேர்!

Sep 12, 2026 - 17:18
 0  5
ஆயிரம் மாணவர்கள்… ஒரே இலக்கு! துளிர் வினாடி வினாவில் அசத்திய 18 பேர்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான துளிர் மற்றும் ஜந்தர்-மந்தர் வினாடி வினா போட்டி – 2026 நடைபெற்றது.பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு, 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான இளநிலை, 9 மற்றும் 10-ம் வகுப்பு உயர்நிலை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மேனிலை என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் முனைவர் க. கேசவன் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் தீனதயாளன், உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலர் நாராயணசாமி, வட்டார வள மேற்பார்வையாளர் ராஜேஷ் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இப்போட்டிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0