கவுண்டம்பாளையம் தொகுதிக்கு ரூ.3.39 கோடியில் 7 சுகாதாரத் திட்டங்கள்...!
கோவை: தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 2026–27ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் வகையில், ரூ.3.39 கோடி மதிப்பில் 7 முக்கிய சுகாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தொகுதிக்கு உட்பட்ட 14 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பெற உள்ளன.
இதில், விளாங்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமுதாய சுகாதார மையமாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் தொகுதி மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகள் அருகிலேயே கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், துடியலூர் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றா நோய் சிகிச்சை, உயர்சிகிச்சை மற்றும் பரிவுரை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
கவுண்டம்பாளையம் மற்றும் எஸ்.எஸ்.குளம் பகுதிகளில் 14 வகையான அடிப்படை இலவச உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. நாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக நடமாடும் மருத்துவ சேவையும், சர்க்கார்சாமக்குளம் பகுதியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவைகளும் செயல்படுத்தப்பட உள்ளன.
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு ரூ.339.19 லட்சம் மதிப்பிலான இந்த 7 முக்கிய சுகாதாரத் திட்டங்களை அறிவித்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோருக்கு, கவுண்டம்பாளையம் சட்டசபை உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, தொகுதி மக்களுக்கு முழுமையான பயன் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக, எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0