கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
பாரம்பரியம் மிக்க கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 30-வது பொதுக்குழுக் கூட்டம், கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மன்றத்தின் முன்னாள் தலைவர் காமராஜ், முன்னாள் செயலாளர் தங்கராஜ், முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில், மன்றத்தின் ஆண்டறிக்கையை முன்னாள் செயலாளர் தங்கராஜ் தாக்கல் செய்தார். தொடர்ந்து, மன்றத்தின் வரவு-செலவு அறிக்கையை முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் தாக்கல் செய்தார்.இதில், 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மன்றத்தின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், தேர்தல் அதிகாரி பாலமுருகன், 2026–2027-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்.இதில், மன்றத்தின் புதிய தலைவராக சுஜித், செயலாளராக சௌந்தர் மோகன், பொருளாளராக ரமேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், துணைத் தலைவர்களாக நிதின் மற்றும் ரவி, இணைச்செயலாளர்களாக ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.செயற்குழு உறுப்பினர்களாக வைர பெருமாள், பாஸ்கர் பாண்டியன், தாமோதரன், பால்ராஜ், பிரசன்னா மற்றும் ஜீவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் 13 நிர்வாகப் பதவிகளுக்கும் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பாலமுருகன் அறிவித்தார்.புதிய நிர்வாகிகள் அனைவரும் தொடர்ந்து பதவியேற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக, கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய செயலாளர் சௌந்தர் மோகன் நன்றியுரை வழங்கினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0