மாவட்ட தடகள அணிக்கு பெருமைமிகு வெற்றி!
கோவை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், 40வது ஜூனியர் தடகளப் போட்டிகள் திண்டுக்கல், நத்தம் பகுதியில் உள்ள NPR கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்நாடு தடகள சங்கத்தின் திட்டக்குழுத் தலைவர் திருமதி. லதா மேடம் அவர்களின் தலைமையிலும், செயலாளர் திரு. சிவகுமார் அவர்களின் மேற்பார்வையிலும், இந்தியாவே வியக்கும் வகையில் இப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.இப்போட்டியில் கோவை மாவட்ட அணி ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடம் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. தொடர்ந்து ஆறாவது முறையாக கோவை மாவட்ட அணி இரண்டாம் இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இவ்வெற்றியைப் பாராட்டும் வகையில், இன்று மாலை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், கோவை மாவட்ட தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின், எம்.எல்.ஏ., அவர்கள் வெற்றி பெற்ற கோவை மாவட்ட அணி வீரர், வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், ₹50,000 பரிசுத்தொகை வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் திரு. சம்சுதீன், பொருளாளர் முனைவர் ஜான் சிங்கராயர், தொழில்நுட்பத் தலைவர் திரு. சீனிவாசன், துணைத் தலைவர் திரு. சரவண காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி. புவனேஸ்வரி, கோவை மாவட்ட பயிற்சியாளர்கள் திரு. நந்தகுமார் மற்றும் திரு. ராஜேஷ் ஆகியோருடன், Rotary Club of Akkuruthi சார்பில் தலைவர் திருமதி. தேன்மொழி, செயலாளர் திருமதி. மஞ்சுளா ஜோசப் மற்றும் குழு உறுப்பினர் திருமதி. மீனா ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.பிரிவு வாரியான சாதனைகள் கோவை மாவட்ட அணி, மாணவர் பிரிவில் – ஒட்டுமொத்த 2ஆம் இடம்
- மாணவியர் பிரிவில் – ஒட்டுமொத்த 2ஆம் இடம் மேலும் வயது பிரிவுகளில், U14 மாணவர்கள் – 1ஆம் இடம்- U16 மாணவர்கள் – 1ஆம் இடம்- U18 மாணவியர் – 1ஆம் இடம் U14 மாணவியர் – 2ஆம் இடம் U18 மாணவர்கள் – 2ஆம் இடம் U20 மாணவியர் – 2ஆம் இடம் என சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர்.மேலும், கோவை மாவட்ட அணி 14 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 30 பதக்கங்களை வென்று, கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
கோவை மாவட்ட தடகள அணியின் இந்த மாபெரும் சாதனைக்கு, அனைத்து வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அணித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் கோவை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!வெற்றி தொடரட்டும்…
கோவை தடகளத்தின் புகழ் உயரட்டும்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0