உலக அரிமா சேவை தினத்தையோட்டி துடியலூர் அரிமா சங்கம் பாலமலை மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்...!
உலக அரிமா சேவை தினத்தை ஒட்டி துடியலூர் அரிமா சங்கம் சார்பில் மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடும் விதமாக, கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள பாலமலை பகுதியில் உள்ள பெருக்கைபதி மலை கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மலைவாழ் மக்களுக்கும் வேஷ்டி, துண்டு, சட்டை, சேலை, சுடிதார் உள்ளிட்ட புத்தாடைகள் வழங்கினர். மேலும் அனைவருக்கும் சைவ, அசைவ விருந்தும் வழங்கினர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள பாலமலை பகுதியில் உ உள்ளது பெருக்கைபதி மலை கிராமம். இங்கு சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் துடியலூர் அரிமா சங்கம் சார்பில் உலக அரிமா சேவை தினத்தை ஒட்டி மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடும் விதமாக, பெருக்கைபதி மலை கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மலைவாழ் மக்களுக்கும் புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.மாவட்ட மலைவாழ் மக்கள் நல்வாழ்வுத் தலைவர் செல்வநம்பி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநர் அரிமா எஸ் பாரதி, முதன்மை விருந்தினராக முன்னாள் சர்வதேச இயக்குநர் ஜி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு தீபாவளி வாழ்த்துக்கள் கூறி கிராம மக்களுக்கு புத்தாடைகளை வழங்கினர். குழந்தைகளுக்கான புத்தாடைகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் அழகு ஜெயபாலான் வழங்கினார். இதில் வேஷ்டி, துண்டு, சட்டை, சேலை, சுடிதார் உள்ளிட்ட புத்தாடைகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து அனைவருக்கு கேசரி, முட்டை, சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட சைவ, அசைவ விருந்தினை முதலாம் துணை ஆளுநர் ராதிகா மது மற்றும் இரண்டாம் துணை ஆளுநர் கே பி வி கோவிந்தன் ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியை ஏ வி முருகேசன் ஒருங்கிணைத்திருந்தார். இதில் துடியலூர் அரிமா சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் என பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து மதியம் வடமதுரை வி எஸ் கே நகர் பகுதியில் உள்ள அரிமா சங்க மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு வருகை தின நிகழ்வில் முதலாம் துணை ஆளுநர் ராதிகா மது மற்றும் இரண்டாம் துணை ஆளுநர் கே பி வி கோவிந்தன் ஆகியோர் சங்கத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, சங்கத்தை மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சிறப்புரையாற்றினர். இறுதியில் சங்க பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0