தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி வெகுஜன அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ..!

Oct 23, 2026 - 17:42
 0  2
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி வெகுஜன அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ..!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு, ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரியும், ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, ஆர்ப்பாட்ட பதாகையில் இடம்பெற்றிருந்த தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் புகைப்படத்தின் மீது பேனாவால் கிறுக்கி தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0