போனஸ் தொகையை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்...!

Oct 24, 2026 - 09:47
 0  1
போனஸ் தொகையை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்...!

ஒரு மாத சம்பளம் அல்லது சட்டப்பூர்வ போனஸ் கோரிக்கைக்கு மாறாக ரூ.5,500 வரவு வைக்கப்பட்டு உள்ளதால் கொந்தளிப்பு: அதிகார குரல் கூட்டமைப்பு கண்டனம்!

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனங்கள் (SWMS) சார்பில், பண்டிகைக் கால கருணைத் தொகையாக (போனஸ்) தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.5,500 தொகையை எதிர்த்துப் பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு முழுமையான ஒரு மாத சம்பளம் அல்லது சட்ட விதிகளின்படி முறையான போனஸ் வழங்கப்பட வேண்டும் என 'அதிகார குரல் கூட்டமைப்பு' தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.இந்நிலையில், பணியாளர்களின் தொடர் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் தடுத்து, திசைதிருப்பும் நோக்கில் அவசர கதியாக ஒவ்வொரு பணியாளர் வங்கிக் கணக்கிலும் ரூ.5,500 மட்டுமே கருணைத் தொகையாகச் செலுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.தங்களின் உழைப்புக்கு ஏற்ற நியாயமான தொகையை வழங்காமல், கண்துடைப்பாகக் குறைவான தொகையை வரவு வைத்து விட்டுப் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் ஒப்பந்த நிறுவனங்களின் நடவடிக்கைக்குப் பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.இதனை வன்மையாகக் கண்டித்து, தங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணியில் ஈடுபட மாட்டோம் என அறிவித்துத் தூய்மைப் பணியாளர்கள் தீவிரப் பணிப்புறக்கணிப்பில் (Strike) ஈடுபட்டு உள்ளனர்.இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.உடனடியாக மாநகராட்சி நிர்வாகமும், சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களும் தலையிட்டுத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் பரிசீலித்து உரிய முழுமையான போனஸ் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0