கோவையில் ரூ.39 லட்சத்தில் புதிய வீடுகள்! TNCD-யின் 31-வது திட்டம் ‘கான்சாஸ் சிட்டி’ அறிமுகம்!
கோவை திருச்சி சாலையில், சிங்காநல்லூர் அருகே, கே.ஜி., குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான டி.என்.சி.டி., நிறுவனத்தின் 31-வது குடியிருப்புத் திட்டமான ‘கான்சாஸ் சிட்டி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 1, 2, 3 பி.எச்.கே., வீடுகள் மற்றும் வில்லமென்ட் வகை வீடுகள் என மொத்தம் 143 வீடுகள் இடம்பெற்றுள்ளன. அறிமுகச் சலுகை விலை ரூ.39 லட்சத்தில் தொடங்குகிறது.
நவீன வாழ்க்கைமுறை வசதிகள், சிறந்த போக்குவரத்து இணைப்பு, அமைதியான சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூரில் இருந்து சுமார் 10 நிமிட பயணத் தொலைவில் அமைந்துள்ள இத்திட்டத்தின் அருகே டிமார்ட், பிரிட்ஜ்வுட்ஸ் சர்வதேசப் பள்ளி, கே.எம்.சி.எச்., சூலூர் மற்றும் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை அமைந்துள்ளன.இதுகுறித்து, டி.என்.சி.டி., நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார் கூறியதாவது:வீடு வாங்க விரும்புவோர் சிறந்த இருப்பிடம், நவீன வசதிகள், அமைதியான வாழ்க்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த மூன்றையும் ஒரே இடத்தில், எளிதில் அணுகக்கூடிய விலையில் வழங்கும் நோக்கில் ‘கான்சாஸ் சிட்டி’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1932 முதல் கே.ஜி., குழுமம் பெற்றுள்ள நம்பிக்கையை இத்திட்டமும் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்றார்.20-க்கும் மேற்பட்ட வசதிகள்!
இத்திட்டத்தில் ஆற்றங்கரைத் தளம், கெஸிபோ ஓய்விடம், பூங்காக்கள், கேம்ப் பயர் வசதியுடன் கூடிய திறந்தவெளிப் பகுதி, ஊஞ்சல் வலை, உள்விளையாட்டு உடற்பயிற்சிக் கூடம், வீட்டிலிருந்தே பணிபுரிவோருக்கான இணை பணியிட வசதி, பல்நோக்கு அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி என 20-க்கும் மேற்பட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.மேலும், ஸ்மார்ட் ஹோம் தானியங்கி வசதிகள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகள் ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நொய்யல் ஆற்றை ஒட்டிய பசுமையான சூழலில் அமைந்துள்ள இத்திட்டம், ‘ஆற்றங்கரையில் அமைதியான வாழ்க்கை’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 3 பி.எச்.கே., வில்லமென்ட் வீடுகள், அண்டை வீடுகளுடன் பொதுச்சுவர்கள் இல்லாத தனியுரிமையுடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. அதேநேரத்தில், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பாதுகாப்பு மற்றும் பொதுவசதிகளும் ஒருங்கிணைக் கப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் வாஸ்து முறைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டி.என்.சி.டி., நிறுவனம் பிரீகாஸ்ட் எனப்படும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கட்டுமானக் கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்கும் எட்டாவது திட்டம் இதுவாகும். நிறுவனத்தின் சொந்தத் தொழிற்சாலையில், எஃகு அச்சுகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சுவர்கள் தயாரிக்கப்படுகின்றன.
நிலநடுக்க மண்டலம் 3-க்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஆர்.சி.சி., ஷியர் வால் கட்டுமான முறையும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கட்டுமானத் தரத்தைச் சீராகப் பராமரிப்பதுடன், தண்ணீர் பயன்பாடு, கட்டுமானக் கழிவுகள், தூசி மற்றும் சத்தம் ஆகியவற்றைக் குறைக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிமுகச் சலுகை விலையாக, 1 பி.எச்.கே., வீடுகள் ரூ.39 லட்சம் முதலும், 2 பி.எச்.கே., வீடுகள் ரூ.57 லட்சம் முதலும், 3 பி.எச்.கே., வில்லமென்ட் வீடுகள் ரூ.76 லட்சம் முதலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், பின்னர் விலைகள் மாற்றியமைக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0