குடிநீர் வீணாகுது… அதிகாரிகள் கவனிப்பார்களா? உத்தரமேரூர் மக்கள் வேதனை...!

Sep 10, 2026 - 17:23
 0  3

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில், குடிநீர் குழாய் உடைந்து, பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரமேரூர் பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 80 ஆயிரம் மக்கள் வசிக்கும் இப்பகுதியில், சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெரிய நாரசம்பேட்டை தெருவில், பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், குடிநீர் பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடி, பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது.

பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த சாலை, போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய சாலையாகும். தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில், சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யக் கோரி, பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வறட்சி காலத்தில் குடிநீர் வீணாவதை தடுக்கவும், பொதுமக்களின் சிரமத்தை போக்கவும், குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0