ஆட்டோ நிறுத்தத்தால் இடையூறு? சிறுவாணி சாலையில் பரபரப்பு போலீசார் தலையிட கோரிக்கை!
கோவை சிறுவாணி சாலை, தெலுங்குபாளையம் பகுதியில் பாரதிய காம்கார் சேனா சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, வாடகைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வளர்த்து வரும் ஆடு, மாடுகளை வாகனம் கேட்டபோதும், ஆட்டோ நிறுத்தம் அமைந்துள்ள பகுதியில் அவற்றை கட்டி வைப்பதால் இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, “உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்” என பதிலளிப்பதாகவும், பின்னர் பிரச்னையில் மேலும் பலரை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் அப்பகுதியினர் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே பிரச்னை பெரிதாகும் முன், செல்வபுரம் போலீசார் உடனடியாக தலையிட்டு, சம்பவம் குறித்து விசாரித்து உரிய தீர்வு காண வேண்டும் என பாரதிய காம்கார் சேனா நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
1
Angry
0
Sad
0
Wow
0