ஆம்னி பேருந்தில் திடீர் மின்கசிவு! குழந்தையுடன் 3 மணி நேரம் தவித்த பயணிகள்… களத்தில் இறங்கிய TVK!

Sep 10, 2026 - 22:36
 0  1

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தில் பயணிகள் ஏறிய சிறிது நேரத்தில், பேருந்துக்குள் இருந்த மின்கம்பிகளில் மின்கசிவு ஏற்பட்டு புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.இதனால் அச்சமடைந்த பயணிகள் உடனடியாக பேருந்திலிருந்து வெளியேறினர்.

ஆனால், மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யாமல், பயணிகளை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், பயணிகளில் ஒருவரின் குழந்தைக்கு இதயப் பிரச்சினை இருப்பதாகவும், உடல்நலக் குறைபாடுகளுடன் இருந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக அப்பகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேரில் சென்று, சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுத்தனர்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0