அழகான பொம்மை... ஆபத்தான பொம்மையாக மாறுவேன்!” கனிமொழி சந்தோஷ் அதிரடி பேச்சு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் மக்கள் பணி மற்றும் சாதனை விளக்க நிகழ்ச்சி, கோவை கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2025 நவம்பர் முதல், திமுகவின் கரூர் கம்பெனி என நான் குறிப்பிடும் தரப்பில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான பேக்கேஜ் எனக்கு வழங்க முன்வந்தனர். 2026 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறும் என ஜோதிட ரீதியாக யூடியூப் சேனலில் பேச வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவில்லை இருப்பினும், திமுக ஆட்சிக்கு வராது என தெளிவாக கூறினேன். பணம் கொடுத்து தேர்தல் முடிவை ஜோதிடம் மூலம் உருவாக்க முடியாது. மக்களின் தீர்ப்பே இறுதியானது.
சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பேசும்போது அமைதியாக இருக்க வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காகத்தான் நாம் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். மக்களுக்காக பேசுவதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.
சமூக வலைதளங்களில் என்னை விமர்சிப்பவர்கள் தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசலாம். என்னை 'அழகான பொம்மை' என சிலர் விமர்சிக்கின்றனர். தேவைப்பட்டால் இந்த அழகான பொம்மை ஆபத்தான பொம்மையாகவும் மாறும்.
தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்த தேர்தல்களில் தனது வலிமையை நிரூபிக்கும். 2031ல் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக இருக்கும்.
கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். குடும்பத்தில் இருப்பது போன்று சிறிய சண்டைகள் இருக்கலாம். ஆனால், வெளியில் இருந்து யாரும் கட்சியின் ஒற்றுமையை பாதிக்க அனுமதிக்கக்கூடாது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் இடங்களில் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். மக்களுக்காக பேசுவதற்கும், மக்களுக்காக நிற்பதற்கும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் பேசினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0