பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இனி காலை உணவு!கவுண்டம்பாளையத்தில் திட்டத்தை தொடங்கி வைத்த கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ...!

Sep 22, 2026 - 13:00
 0  1

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிம்ம நாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவுத் திட்டத்தை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.

மாணவர்களின் கல்வி மற்றும் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மேலும் பல அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான காலை உணவு வழங்குவதன் மூலம், காலையில் உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் வகுப்பறையில் முழு கவனத்துடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்படுகிறது.

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கல்விக் கனவை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், மாணவர்களின் கல்வியுடன் ஊட்டச்சத்தையும் இணைக்கும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

நிகழ்ச்சியின்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ கேட்டறிந்தார். மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும் என்றும், கல்வி, ஊட்டச்சத்து மற்றும் மாணவர் நலனை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0