கொடிசியாவில் அக்.6 முதல் ‘ரா மேட் இந்தியா 2026’ கண்காட்சி ..!

Sep 30, 2026 - 14:32
Sep 30, 2026 - 17:48
 0  6
கொடிசியாவில் அக்.6 முதல் ‘ரா மேட் இந்தியா 2026’ கண்காட்சி ..!
கொடிசியாவில் அக்.6 முதல் ‘ரா மேட் இந்தியா 2026’ கண்காட்சி ..!

கோவையில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், ஆதார வளங்கள், உற்பத்தி மற்றும் மறுசுழற்சி தொடர்பான ‘ரா மேட் இந்தியா 2026’ கண்காட்சி, அக். 6 முதல் 8-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகம், ஹால் ‘ஏ’-வில் நடைபெற உள்ளது.இதுகுறித்து ரா மேட் இந்தியா 2026 கண்காட்சியின் தலைவர் டி. ஸ்ரீதர் கூறியதாவது:

கோவை மற்றும் சுற்றுப்புற தொழிற்சாலைகளின் மூலப்பொருள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை கண்டறிந்து கொள்முதல் செய்வதற்கும், உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை நேரடியாக தொழில் நிறுவனங்களிடம் காட்சிப்படுத்துவதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமையும்.பொருட்களை கையாளும் உபகரணங்கள், கிடங்கு வசதிகள், போக்குவரத்து, மூலப்பொருட்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளின் மறுசுழற்சி உள்ளிட்டவை குறித்தும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கண்காட்சிக்கு இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், இந்திய ஈயம் மற்றும் துத்தநாக மேம்பாட்டு ஆணையம், உலோக மற்றும் துருப்பிடிக்காத எஃகு வணிகர்கள் சங்கம், இந்திய பொருட்கள் மறுசுழற்சி சங்கம் மற்றும் இந்திய சரக்கு அனுப்புநர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு அளிக்கின்றன.

எம்.சி.எக்ஸ் உலோகங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனம், மும்பை மற்றும் ராமேஷிரான் மற்றும் ஸ்டீல் நிறுவனம், கோயம்புத்தூர் ஆகியவை வெள்ளி வகை கண்காட்சி நிறுவனங்களாக பங்கேற்கின்றன. பெடரல் வங்கி, கோயம்புத்தூர் வங்கி ஆதரவு வழங்குகிறது.இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள், பிளாஸ்டிக், ரப்பர் உதிரிபாகங்கள், பேக்கேஜிங் பொருட்கள், பொருட்களை கையாளும் மற்றும் சேமிக்கும் உபகரணங்கள், மரப்பெட்டிகள், பாலெட்டுகள், ஃபாஸ்டனர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

தொடக்க விழா அக். 6-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக தினேஷ் பி. ராவ் பங்கர்கர், ஐ.ஆர்.எஸ்.முதன்மை ஆணையாளர், ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறை, கோயம்புத்தூர் பங்கேற்கிறார்.

கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வணிக பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். மாணவர்கள் அக். 8-ம் தேதி மதியம் 2 மணி முதல் அனுமதிக்கப்படுவர்.தொழில் நிறுவன உரிமையாளர்கள், கொள்முதல் பிரிவு அதிகாரிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமையும்.இவ்வாறு ரா மேட் இந்தியா 2026 தலைவர் டி. ஸ்ரீதர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0