ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் யூஸ்டு கார்கள் அதிரடி விற்பனை மேளா ..!

Oct 11, 2026 - 15:47
 0  2
ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் யூஸ்டு கார்கள் அதிரடி விற்பனை மேளா ..!
ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் யூஸ்டு கார்கள் அதிரடி விற்பனை மேளா ..!
ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் யூஸ்டு கார்கள் அதிரடி விற்பனை மேளா ..!

கோவை நவ இந்தியா பகுதியில், ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா கோலாகலமாகத்தொடங்கியுள்ளது அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்கிய இந்த மேளா, அக்டோபர் 19-ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது.

இந்த மேளாவில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.சிறிய ரக கார்கள் முதல் உயர்தர கார்கள் வரை, 50 ஆயிரம் ரூபாய் முதல் பல்வேறு விலை வரம்புகளில் கார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது பழைய கார்களை மாற்றிக்கொள்ளும் வசதி, கார்களை விற்பனைக்காக நிறுத்தி வைக்கும் ‘பார்க் அண்ட் செல்’ வசதி, வாகன ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கான உதவி உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.குறிப்பாக, தமிழகம் முழுவதும் இலவசமாக வாகன உரிமையாளர் பெயர் மாற்றம் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விழா மற்றும் தீபாவளி விற்பனை மேளாவில், வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார்.கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 7092920021 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0