மாணவர்களின் புதுமைக்கு களமாக மாறிய கேபிஆர் கல்லூரி! 45 அணிகள் பங்கேற்ற ‘ஹேக் 2 இம்பாக்ட்’ போட்டி!
கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் சார்பில், ‘ஹேக் 2 இம்பாக்ட் 2026’ மற்றும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இரண்டாம் கட்ட முன்மாதிரிகளை நெறிப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் பி. கீதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், மொத்தம் 45 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 6 மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இப்போட்டியில், மாணவர்கள் தங்களது புதுமையான முன்மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை காட்சிப்படுத்தினர். அவற்றை நடுவர் குழுவினர் மதிப்பீடு செய்து, போட்டியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.
போட்டியில் ‘ஜீரோ விஷன்’ அணி முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்தையும், ‘மைண்ட்பிளஸ்’ அணி இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரத்தையும், ‘மெட்ரோனிக் அண்ட் மெட்ரெக்’ அணி மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரத்தையும் பெற்றன.
நிகழ்ச்சியில் நடுவர்களாக ரத்தினம் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் கார்த்திகேயன், இனோவேட் எட்டியூடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் திரு. ஏ. முகமது அலி, மற்றும் ராம்பெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு. பிரசாந்த் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்து வழிகாட்டினர்.
மாணவர்கள் தங்களது புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தவும், ஆய்வுகளை மேம்படுத்தவும், கல்வி மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடமிருந்து மதிப்புமிக்க ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறவும் இந்நிகழ்வு சிறந்த தளமாக அமைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0