“அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா”

Sep 11, 2026 - 20:27
Sep 12, 2026 - 11:15
 0  43
“அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா”
“அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா”
“அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா”
“அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா”
“அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா”
“அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா”

கோவை கே.என்.ஜி. புதூர் பிரிவு, தடாகம் சாலையில் உள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது.

விழாவுக்கு கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ஆர். சுரேஷ் குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை ஹோட்டல் ஸோன் பை தி பார்க் நிறுவனத்தின் சி.டி.பி., செஃப் சச்சின் கலந்து கொண்டார்.

விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் விநாயகர் வழிபாடு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மாணவர்களின் சமையல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கொழுக்கட்டை தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை தயாரித்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

மேலும், மாணவர்களின் கலை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் விழாவுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தன.

நிகழ்ச்சியில் கல்லூரியின் துறைத் தலைவர் டி. கார்த்திகேசவன், நிர்வாக அலுவலர்  எம். புவனேஸ்வரி, ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய பண்டிகையை மாணவர்களுடன் இணைந்து கொண்டாடியதன் மூலம், இந்திய கலாசாரம், பாரம்பரிய உணவு மற்றும் சமையல் முறைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழா அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0