சி.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு மையம் தொடக்கம்! 750 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு!

Oct 31, 2026 - 16:43
Nov 1, 2026 - 00:29
 0  3
சி.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு மையம் தொடக்கம்! 750 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு!
சி.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு மையம் தொடக்கம்! 750 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு!
சி.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு மையம் தொடக்கம்! 750 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு!
சி.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு மையம் தொடக்கம்! 750 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு!

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (சி.ஐ.டி.), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்தும் வகையில், 'கிரேன்' (சி.ஆர்.ஏ.என்.இ.) என்ற புதிய மையம் தொடங்கப்பட்டது.இந்த மையத்தை, கல்லூரியின் முன்னாள் மாணவியும், டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை மாற்ற அதிகாரியுமான சுகன்யா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர், தலைவர் மற்றும் தாளாளர் சந்தோஷ் பங்கேற்றார்.மேலும், காலென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், ரெவச்சர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான அஷ்வின் பாரத், வைனர் நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைமை அதிகாரியும், பியர் ஐலண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராஜேஷ் ராஜகோபாலன், நியோ கிளவுட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் உள்கட்டமைப்புப் பிரிவின் முதன்மைத் தீர்வுக் கட்டமைப்பாளரான அய்யப்பன் புருஷோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.

சி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் தலைமை கல்வி அதிகாரி அலமேலு, கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் சுகன்யா பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு தொழில்துறைகளில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் மற்றும் பொறியியல் துறையில் உருவாகும் புதிய வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

750 மாணவர்களுக்கு பயிற்சி

இந்த மையத்தின் மூலம் சுமார் 750 மாணவர்களுக்கு தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ற வகையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான இரண்டு சிறப்புப் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொறுப்பான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, நம்பகமான செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குதல், சோதனை செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்காக பிரத்யேக செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆராய்ச்சித் திட்டங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்துறை சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் பணிகளில் ஈடுபடலாம்

ஆலோசனைக் குழு:

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பொறியியல் பேராசிரியரும், மிச்சிகன் கணக்கீட்டு கண்டுபிடிப்பு மற்றும் பொறியியல் நிறுவனத்தின் இயக்குநரும், ஜெமினஸ்.ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரியுமான கார்த்திக் துரைசாமி தலைமையில் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அஷ்வின் பாரத், ராஜேஷ் ராஜகோபாலன், அய்யப்பன் புருஷோத்தமன் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவர்.

இயந்திரவியல், சிவில், மின்னியல், மின்னணுவியல் உள்ளிட்ட அனைத்து பொறியியல் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, மருத்துவம், உற்பத்தி, எரிசக்தி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான நவீனத் தீர்வுகளை உருவாக்குவதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0