சிஎஸ்ஐ தேவாலய அரங்கில், போக்குவரத்து பணியாளர் ஜெய ஐக்கியம் சார்பில் “குடும்ப மனநிறைவு முகாம் – 2026..!

Oct 3, 2026 - 06:26
 0  10

கோவையில் போக்குவரத்து பணியாளர் ஜெய ஐக்கியம் மற்றும் கோவை மண்டலம் சார்பில், “குடும்ப மனநிறைவு முகாம் – 2026” எனும் சிறப்பு நிகழ்ச்சி, கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில், நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஎஸ்ஐ. இம்மானுவேல் ஆலயத்தின் தலைமை ஆயர் ராஜேந்திர குமார், தலைமை தாங்கினார். தொடர்ந்து கோவை சரவணா நகர் பகுதியில், உள்ள பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் தலைமை போதகர் ஜான்பிட்டர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பேருந்து நடத்துநர்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் நலனுக்காகவும், அதிகாரிகளின் இடைச்செருக்கத்திற்காகவும், தங்களின் வாழ்க்கைச் சாட்சியை பகிர்ந்து கொள்ளவும், குடும்பத்துடன் இணைந்து இறைவனை நாடும் வகையிலும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இதில் கோவை மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜாநம்பி, ராபர்ட்ஜான், குணசேகரன், பிரான்ஸ், சூடே, ராஜேஷ், ஜோசப், ஜெயபால், ராபர்ட் ஜான் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவனத் தலைவரும், நோட்டரி வழக்கறிஞருமான புஸ்பானந்தம், ஜெபா, வர்ஷா, வர்ஷினி மோகன்ராஜா, வழக்கறிஞர் குமாஸ்தாகள் லட்சுமி, பால்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0