காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்திபார்க் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும்,பொதுமக்களிடம் மகாத்மா காந்தி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காந்தியவாதி..!
அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதனை, முன்னிட்டு, மகாத்மா காந்தியின் தியாகத்தையும், அகிம்சை வழியில் அவர் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டத்தையும் நினைவுகூறும் வகையில், சத்தியம், அகிம்சை, ஒற்றுமை மற்றும் எளிமை ஆகிய உயரிய கொள்கைகளை உலகிற்கு எடுத்துரைத்த மகாத்மா காந்தியின் வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்கும் என்றும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.
இந்த நாளில் , மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் நிறைந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என கோவையில் காந்தியவாதியான ராம் அனுஜ் சிங், சார்பாக, அவர் குடும்பத்தை சேர்ந்த நான்காவது தலைமுறை மக்களும் ஒன்றிணைந்து காந்தி ஜெயந்தி விழாவை, கோவை காந்தி பார்க்கில் உள்ள காந்தியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, 157 விளக்குகள் ஏற்றி வைத்து, பஜனைகள் பாடி கொண்டாடினர்
மேலும், காலையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கியும், மதியம் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் செய்தும், இந்த காந்தி ஜெயந்தி விழாவை மிகச் சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தர என்னென்ன தியாக யுக்திகளை பயன்படுத்தினார் என்பது குறித்தும், காந்தி பார்க் பகுதிக்கு நடை பயிற்சி மேற்கொள்ள வந்த அனைவரிடமும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி மகாத்மா காந்தியின் சேவைகளை போற்றினார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0