தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு சொலார் பிசினஸ் அசோசியேஷன் அமைப்பினர் சார்பில் நன்றிகளை தெரிவித்தனர்...!

Oct 7, 2026 - 06:49
 0  3
தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு சொலார் பிசினஸ் அசோசியேஷன் அமைப்பினர் சார்பில் நன்றிகளை தெரிவித்தனர்...!
தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு சொலார் பிசினஸ் அசோசியேஷன் அமைப்பினர் சார்பில் நன்றிகளை தெரிவித்தனர்...!

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, தமிழ்நாடு சோலார் பிசினஸ் அசோசியேஷன் சங்கத்தினர் கூறியதாவது.. மத்திய அரசின் 78ஆயிரம் ரூபாய், சூரிய மின் மானியத்துடன், தமிழக அரசின் கூடுதல் 22ஆயிரம் மானியத்தையும் இணைத்து, தகுதியுள்ள வீட்டு மின் நுகர்வோருக்கு மொத்தமாக 1 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு சோலார் பிசினஸ் அசோசியேஷன் சார்பில் மனமார வரவேற்பதாகவும், 

பொதுமக்கள் அதிக அளவில் மேற்கூரை சூரிய மின் நிலையங்களை அமைக்கவும், சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பசுமை எரிசக்தி வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என தெரிவித்தனர். 

இத்தகைய பயனுள்ள திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கும் தமிழ்நாடு சோலார் பிசினஸ் அசோசியேஷன் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர் 

மேலும் இது குறித்து பேசிய தமிழ்நாடு சோலார் பிசினஸ் அசோசியேஷன் தலைவர் ஈரோடு கந்தசாமி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் பிரபாகர், சங்கத்தின் செயலாளர் செல்வகுமார், சங்கத்தின் இணைச் செயலாளர்கள் சுஜய் கங்காதரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1