தேசிய அரங்கில் 10 பதக்கங்கள் வென்ற கோவை தாய்பாக்ஸிங் வீரர்கள்!
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் நடந்த 17வது தேசிய தாய்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
ஆக., 21 முதல் 23ம் தேதி வரை நடந்த இப்போட்டியில், நாடு முழுவதும் இருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அணியின் சார்பில் 85 வீரர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட தாய்பாக்ஸிங் சங்கத்தின் சார்பில், கென்ஷு கலை மற்றும் விளையாட்டு அகாடமி, சான் தற்காப்புக் கலை அகாடமியைச் சேர்ந்த 10 மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
தேசிய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கோவை வீரர்கள், வரும் நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற உள்ள உலக அளவிலான தாய்பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தாய்பாக்ஸிங் சங்கத் தலைவர் ரென்ஷி டாக்டர் பிராங்க்ளின் பென்னி, நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ரென்ஷி கே. ஷீக் அப்துல்லா, கோவை மாவட்ட தாய்பாக்ஸிங் சங்கத் தலைவர் ரென்ஷி பி. அமிர்தராஜ், பொருளாளர் எஸ்.எம். சூர்யா பிரபு, சங்க நிர்வாகிகள் சிவராமச்சந்திரன், ஜெயவர்த்தனவேல், திலக வர்ஷன், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தேசிய அரங்கில் சாதனை படைத்துள்ள கோவை வீரர்கள், உலக அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா, தமிழகம் மற்றும் கோவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
4
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
4