ஓணம் கொண்டாட்ட வீடியோ வைரல்! 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், ஆர்.வி.எஸ். குழும கல்வி நிறுவனங்களின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் சமன்யூ சதீஷ் இல்லத்தில், ஸ்ரீ பனக்காடு சையத் முனவ்வரலி ஷிஹாப் தங்கல் குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அன்பும், நட்பும் நிறைந்த இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ, 10 மில்லியன் பார்வைகளை கடந்து, தொடர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தங்கல் மற்றும் குடும்பத்தினருக்கு இடையேயான அன்பான உரையாடல்கள், மகிழ்ச்சியான தருணங்கள், ஓணம் பண்டிகையின் அன்பு, ஒற்றுமை, நட்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
தங்கலுடன் ஓணம் கொண்டாடியது தங்களது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத தருணம் என சமன்யூ சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளப் பதிவில், தங்கல் தனது இதயத்தில் எப்போதும் சிறப்பான இடம் பெற்றிருப்பதாகவும், அவருடன் ஓணம் கொண்டாடிய வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்ததாகவும் சமன்யூ சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.
மனிதநேயம், அன்பு, நட்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் இந்த ஓணம் கொண்டாட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
அனைவருக்கும் மகிழ்ச்சியும், அமைதியும், அன்பும் நிறைந்த ஓணம் நல்வாழ்த்துகள்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0