பழைய தங்கம் வீட்டில் இருக்கா? இனி கூடுதல் லாபம் உங்களுக்குத்தான்! தனிஷ்க் அதிரடி தீபாவளி சலுகை!
கோவை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம் சார்பில், ‘பிக் தீபாவளி திருவிழா’ சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு, பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிளைகளில் நடைபெறுகிறது.பாரம்பரிய சுவையில் புதிய இனிப்பு வகைகள்!
வாடிக்கையாளர்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தை மேலும் இனிமையாக்கும் வகையில், பாரம்பரிய சுவையுடன் கூடிய பல்வேறு புதிய இனிப்பு வகைகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன. மேலும், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசளிக்கும் வகையில், பிரைம், நோபல், ஹெரிடேஜ், ஃபெஸ்டிவ் மொமென்ட்ஸ் மற்றும் மாஸ்டர் பீசஸ் எனப் பல்வேறு பிரத்யேக இனிப்புப் பரிசுத் தொகுப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.தரம், புத்துணர்ச்சி, தனித்துவமான சுவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம், ஒவ்வொரு பண்டிகையையும் வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாற்றி வருகிறது.
தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நிறுவன நிர்வாகம், அனைவருக்கும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0