கலை மூலம் அதிரடி விழிப்புணர்வு..! பெண்கள் பாதுகாப்புக்காக களமிறங்கிய தன்னார்வலர்கள்!”
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சினேகிதி வளரிளம் பெண்கள் பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளுக்கான கூட்டமைப்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த தன்னார்வல குழுக்கள் சார்பில், “புதுயுகம் படைப்போம் கலைப்பயணம் 2026” என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த சர்வோடிரஸ்ட் தன்னார்வல கூட்டமைப்புகளின் இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,பெண்கள் கல்வி மற்றும் பணிக்கு செல்லும் இடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும்,பாலியல் தொல்லைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளை எதிர்கொள்ளும் போது தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தன்னார்வலர்கள் ஏந்தினர்.நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தன்னார்வல குழுவினர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0