மூட்டுவாதத்தை விரட்ட இளைஞர்கள் கையில் விழிப்புணர்வு ஆயுதம்! கோவையில் 1000+ மாணவர்கள் அதிரடி பேரணி!
கோவையில் மூட்டுவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விஜிஎம் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற நடைப்பேரணையில், 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.உலக மூட்டுவாத தினத்தை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், விஜிஎம் மருத்துவமனையின் ஓர் அங்கமான விஜிஎம் ஆர்த்தோ கேர் சார்பில், ‘ஹால்ட் ஆர்த்ரைட்டிஸ் 2026’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜிஎம் ஆர்த்தோ கேர் பிரிவின் தலைவரும், மூட்டுவாதம் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சுமன் சிபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நேரு, எஸ்என்எஸ், சேரன், பிபிஜி, ஜே.கே. மற்றும் ரத்தினம் கல்லூரிகளைச் சேர்ந்த துணை மருத்துவப் படிப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுமன் சிபிஎஸ், முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம் என வலியுறுத்தினார்.
விஜிஎம் குழுமத் தலைவர் டாக்டர் விஜிஎம் பேசுகையில், மூட்டுவாதம் ஒருவரின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடியது என்பதால், நோய் குறித்த விழிப்புணர்வும் உரிய கவனமும் அவசியம் என்றார்.கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஐஏஎஸ், நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவர்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ள வழிகாட்டினார். மேலும், ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 100 நோயாளிகள் அல்லது பொதுமக்களிடம் மூட்டுவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் மதுரா பிரசாத் சுமன், டாக்டர் வம்சி மூர்த்தி கே., டாக்டர் மித்ரா பிரசாத் மற்றும் டாக்டர் கோகுல்க்ருபா சங்கர் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர் மூட்டுவாத த்தைத் தடுப்பது, மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை இளைஞர்களிடையே ஊக்குவிப்பதே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0